செவ்வாய், 6 ஜூலை, 2010

இனிப்பு புளிப்பு சட்னி


இனிப்பு புளிப்பு சட்னி

தேவையான பொருள்கள்
புளிஅரை கிலோ
காய்ந்த மிளகாய் பவுடர் ஒரு டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி பவுடர் ஒரு டீஸ் ஸ்பூன்
வாசனைக்கு ஒருதுளி இஞ்சி பவுடர்
ஒரு டீஸ் ஸ்பூன் உப்பு
கால் டீஸ் ஸ்பூன் மிளகு பவுடர்
சீனி நாலு கரண்டி (குழம்பு கரண்டிஅல்லது குழி கரண்டி )
அரை டீஸ் ஸ்பூன் கரம் மசாலா பவுடர்
சீரகம்பவுடர் ஒரு டீஸ் ஸ்பூன்
புட் கலர் அல்லது கேசரி கலர் சிவப்பு சிறிது
வெந்தய பவுடர் அரை டீஸ் ஸ்பூன்
செய்முறை
முதலில் அரை கிலோ புளியை ஒருமணி நேரம் ஊற வைக்கவும் (புளியை வெந்நீரில் ஊற வைத்தல் கரைக்க ஈசி புளிச்சாறும் கெட்டியாக இருக்கும் ) அடுத்து கெட்டியான புளிகரைசல் எடுத்து ஒரு பத்திரத்தில் ஊற்றி அதில் மேலே சொன்ன எல்லா பொடிகளையும் கலக்கவும்
பின்பு அடுப்பில் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கிளறவும் (அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும் அடிபிடிக்காமல் இருக்கும் )
பொதுவாக நார்த் இந்தியன் டிஷ்களில் சாட் ஐட்டம் வகைகளில் தவறாமல் இடம் பிடிக்கும் இந்த சட்னி சமோசா, தோசை ,இட்லி சப்பாத்திக்கு கூட தொட்டு கொள்ள நன்றாக இருக்கும் .